விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கு மதுரை வீரர் தகுதி

58views

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் பாலகுமரன் (வயது 30). இவர் தேசிய-மாநில அளவில் நடக்கும் பாக்சிங், கிக் பாக்சிங், டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் கடந்த 8 ஆண்டுகளாக பங்கேற்று பதக்கம்-விருதுகளை குவித்து வருகிறார். இந்தோனேசியா நாட்டில் ஆசிய குத்துச்சண்டை போட்டி, அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பாலகுமரன் பங்கேற்க உள்ளார்.

ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு இந்தியா சார்பில் மதுரை வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளது. இது தொடர்பாக பாலகுமரன் கூறுகையில், தேசிய அளவிலான பாக்சிங், கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கேற்று பல முறை 2-வது பரிசை வென்று உள்ளேன். அதேபோல சர்வதேச- தேசிய டேக்வாண்டோ போட்டிகளில் தங்கபதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளேன்.

ஆசிய குத்துசண்டை போட்டியில் தற்காப்பு கலை (எம்.எம்.ஏ) பிரிவில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் கேரளாவில் நடந்தது. இதில் வெற்றி பெற்று அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடக்க உள்ள போட்டியில் கலந்து கொள்கிறேன். ஆசிய போட்டியில் 18 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறேன். ஆசிய போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம்” என்று தெரிவித்து உள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!