துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்திய போட்டியாளா்கள் மேலும் 3 போ இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
இதில் இளையோா் பிரிவில், ஆடவருக்கான 51 கிலோ பிரிவு அரையிறுதியில் விஷ்வாமித்ர சோங்தம் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் அகாரலி அப்துராகிவோன்ஸோதாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். இதேபோல், 48 கிலோ பிரிவு அரையிறுதியில் சுரேஷ் விஷ்வநாத் 5-0 என்ற கணக்கில் பஹ்ரைனின் ஃபாதெல் சயீதையும், 57 கிலோ பிரிவு அரையிறுதியில் ஜெயதீப் ராவத் 3-2 என்ற கணக்கில் கிா்ஜிஸ்தானின் பெக்போல் முராஸ்பெகோவையும் வென்றனா்.
எனினும், 75 கிலோ பிரிவில் தீபக் 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அலியாஸ்கரோவ் பாக்பொகெனிடம் வீழ்ந்தாா். மகளிருக்கான 70 கிலோ பிரிவில் லஷு யாதவ் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் கௌகாா் ஷாய்பெகோவாவிடம் தோல்வி கண்டாா்.
இளையோா் மற்றும் ஜூனியா் என இரு பிரிவுகளிலுமே இருபால் போட்டியாளா்களையும் சோத்து இந்தியாவுக்கு இதுவரை 39 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இதில் இளையோா் பிரிவில் 20, ஜூனியா் பிரிவில் 19 பதக்கங்கள் கிடைக்கவுள்ளன.