விளையாட்டு

‘அவரு வேஸ்டுனு நானும்தான் சொன்னே’…எங்கள எல்லாம் மிரள வச்சுடாரு: சோப்ரா ஓபன் டாக்!

48views

விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த இந்திய வீரர் விளையாடினார் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்ற நிலையில், அதில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி, ஜோகனஸ்பர்க்கில் துவங்கி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றால், இந்திய அணி தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துவிடும் என்பதால், இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், இந்திய அணி படுமோசமாக சொதப்பி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், முதல் 35ஆவது ஓவர்கள் வரை ஷர்தூலுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கவில்லை. அதன்பிறகு பந்தை கையில் எடுத்த ஷர்தூல் தாகூர் 7/61 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால், தென்னாப்பிரிக்காவால் 27 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நேரத்தில் ஷர்தூல் தாகூர் 28 ரன்களை சேர்த்ததால், இந்தியாவில் 240 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. இந்நிலையில், இவரது ஆல்-ரவுண்டர் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

“இரண்டாவது டெஸ்டில் ஷர்தூல் தாகூருக்குப் பதிலாக வேறு ஒருவரை சேர்க்க வேண்டும் என கூறியவர்களில் நானும் ஒருவன். ஆனால், அந்த கணிப்பு தவறு என்பதை அவர், தனது ஆட்டத்தின் மூலம் தெரிவித்துவிட்டார். அணிக்கு 4ஆவது பௌலராக இருந்து நீங்கள் விக்கெட் எடுக்காமலும், ரன் அடிக்காமலும் இருந்தால் உங்களுக்கான இடம் பறிபோய்விடும்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஒருவேளை ஒரு டெஸ்டில் உங்களுக்கு 35ஆவது ஓவர்வரை பந்துவீச வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும், சரியாக பேட்டில் செய்யவில்லை என்றாலும், அடுத்த டெஸ்டில் உங்களுக்கான இடம் மற்றவருக்கு கொடுக்கப்படும். இரண்டாவது டெஸ்டில் ஷர்தூலுக்கு முதல் 35 ஓவர்களில் பந்துவீச வாய்ப்பு கொடுக்காதபோதும் அப்படிதான் நினைத்தோம். நிச்சயம், மூன்றாவது டெஸ்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கருதினோம். ஆனால், அவர் தனது அபார திறமையால் முக்கியமான நேரங்களில் 7 விக்கெட்களை வீழ்த்தி, மிரள வைத்தார். அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக 28 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்ய உதவினார். ‘லார்ட் ஷர்தூல்’ உண்மையில் தனித்துவமானவர்தான்” எனத் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!