இந்தியா

அழைப்பு, இணைய பயன்பாடு தரவுகள் 2 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

55views

தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கவேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சந்தாதாரர்களின் நலன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுடைய தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை முன்பு ஓராண்டு வரை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

இதை மாற்றி தற்போது குறைந்தது 2 ஆண்டுகள் வரை சேமித்து வைக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வருகிறது. இதற்காக வழங்கப்பட்ட உரிமத்தில் கடந்த20-ம் தேதி திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக உரிமம் பெற்றநிறுவனங்கள் அனைத்து வர்த்தகஅழைப்புகள், அழைப்பு தொடர்பான விரிவான விவரங்களை குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது சேமித்து வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் சந்தாதாரர்கள் பயன்படுத்திய இணையதளங்கள், லாக்-இன், லாக்-அவுட் செய்தவிவரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!