இந்தியா

அரபிக்கடலில் உருவானது சூறாவளி புயலான டவ்-தே புயல் !

85views

டவ்-தே புயல் மே 18 ஆம் தேதி காலைக்குள் குஜராத் கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் இது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ள நிலையில் மே 18 ஆம் தேதி காலைக்குள் குஜராத் கடற்கரை பகுதியில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், டவ்-தே புயல் ‘மிகக் கடுமையான’ சூறாவளி புயலாக அதாவது 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த புயலால், தமிழ்நாடு, கேரளா, கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!