போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் வசிக்கும் பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 62, இதற்கு முன் முதல்வர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தவர். அரசு அதிகாரிகள் தொடர்பாக அவர் பேசும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அதில் அவர் கூறுவதாவது:மத்திய அமைச்சர், முதல்வர் என 11 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளேன். ஒரு பிரச்னை தொடர்பாக நாங்கள் விவாதித்து நடவடிக்கை மேற்கொள்வோம். அதிகாரிகள் எங்களை சுற்றி நிற்பர். அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கும் நாங்கள்தான், அவர்கள் எந்த பதவியில் இருக்க வேண்டும் என முடிவு செய்கிறோம். எங்கள் அரசியலுக்கு அவர்களை பயன்படுத்திக்கொள்கிறோம். எங்கள் செருப்புகளை மட்டுமே அவர்களால் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறுகிறார்.இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
44
You Might Also Like
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும்பக்தர்கள்
கேரள மாநிலம் புகழ்மிக்க சபரிமலையில் நேற்று முன்தினம்மாலை நடை திறக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை இருமுடிக் கட்டிகொண்டு பக்தர்கள் கூட்டம் அலை அலையாய் சென்று தொடர்ந்து ஐயப்பனை தரிசனம்...
புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் துபாய் வாழ் முனைவர் ஆ. முகமது முகைதீனுக்கு ‘பிரைட் ஆஃப் இந்தியா’ விருது வழங்கி பாராட்டு
புதுச்சேரி, அக். 27: புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் நாள் பல்துறைப் பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்வில், துபாய் வாழ் தொழிலதிபர், கல்வியாளர், சமூக ஆர்வலர் முனைவர்...
வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷத்திற்கு ‘தலைமுறை தலைவர் என்ற விருது
பாண்டிச்சேரியில் நடத்திய ஆசிரியர் நாள் பன்னாட்டு உலக சாதனை கருத்தரங்கு விழாவில் வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷத்திற்கு 'தலைமுறை தலைவர் என்ற விருதுதை தேசிய...
புதுச்சேரியில் ஆசிரியர் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு உலக சாதனை ஐம்பெரும் விழா
புதுச்சேரி, அக்டோபர் 27, 2024: கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் நெக்சஸ் குழுமம் இணைந்து நடத்திய "4வது ஆசிரியர் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு உலக சாதனை...
கொச்சி மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழக வீரர்
கொச்சி : கொச்சி நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ...