உலகம்

அமெரிக்க கப்பலை நெருங்கி வந்த ஈரான் கப்பல் – துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கப்பட்டது

64views

பாரசீக வளைகுடாவின் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க போர் கப்பலுக்கு மிக நெருக்கமாக ஈரான் துணை இராணுவப் படையின் கப்பல் வந்ததையடுத்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

அமெரிக்க கப்பலுக்கு 200 அடி தூரத்தில் நெருங்கி வந்தமையினால் தமது கப்பலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்க படையினர் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் துணை இராணுப் படையினர் நெருங்கி வரும் போது ரேடியோ வாயிலாகவும் ஒலிப்பெருக்கி உதவியுடனும் எச்சரிக்கை விடுத்தும் அதனை ஈரான் நாட்டுக்கப்பல் பொருட்படுத்தாமல் நெருங்கி வந்தமையினாலே சுட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலைமை ஏற்பட்டதாக அமெரிக்க கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரான் துணை இராணுவத்தின் இதுபோன்ற செயல் தற்போது இரண்டாவது முறையாகவும் நடந்தேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!