உலகம்

அமெரிக்காவில் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை : அதிபர் ஜோபிடன் அதிரடி

60views

மெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்திக் கொண்டவர்கள் பணியிடம் உள்ள பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சிடிசி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்றதும் செயல்படுத்திய 100 நாள் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. தடுப்பூசி நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் கொரோனா தொற்று அங்கு கட்டுக்குள் வந்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை சுமார் 11.7 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்று நோய் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அவர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றவும் அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர் ஜோ பிடன் செய்தியாளர்கள் மத்தியில் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க தேசிய சுகாதார ஆணையம் இதுவரை 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தி இருக்கிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்ற அமெரிக்காவின் அறிவிப்பு தடுப்பூசியின் நாட்டமில்லாத மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!