உலகம்

அமெரிக்காவில் சோகம்.. குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!

46views

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர் ரிஜிஸ்டர் செய்யுங்கள் ரூ.1000 மதிப்பிலான அமேசான் வவுச்சர் வென்றிடுங்கள் சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த் அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலதெல்பியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 6:40 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பயங்கர தீ விபத்து மூன்று அடுக்குமாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் மொத்தம் 26 பேர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைக்க போராடினார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தீயில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கருவிகள் வேலை செய்யவில்லை மேலும் ,படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தின் போது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 4 தீ கண்டறியும் கருவிகள் வேலை செய்யாததே உயிரிழப்புகள் ஏற்பட்ட காரணமாக அமைந்து விட்டது.

மிகவும் சோகமான நாள் இது தொடர்பாக பிலடெல்பியா மேயர் ஜிம் கென்னி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ எங்கள் நகர வரலாற்றில் இது மிகவும் சோகமான நாட்களில் ஒன்றாகும். இதற்காக நாங்கள் அனைவரும் துக்கப்படுகிறோம்’ என்று கூறினார். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் பிலடெல்பியாவின் பொது வீட்டுவசதி ஆணையத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

35 வருடங்களில் மோசமான தீ விபத்து ”35 வருடங்களில் நான் பார்த்த மிக மோசமான தீ விபத்து இது” என்று பணியில் தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறினார். தீ விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. இது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரித்தனர். இந்த குடியிருப்பில் இருந்து மேலும் சிலர் வெளியேற்றப்பட்டதாகவும், தீ விபத்தால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!