சினிமா

அதுக்காக நிர்வாண போட்டோக்களை ஷேர் பண்ணல… விஷ்ணு விஷால் ஓபன்ஸ் அப்

76views

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் என அனைத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் நிர்வாண போட்டோக்களை ஷேர் செய்து சர்ச்சையில் சிக்கினார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் நிர்வாண போட்டோக்களை வெளியிட்டது ஏன் என பேசியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது, “இது ஒரு போட்டோஷூட் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் தூங்கி எழுந்ததும் ஜுவாலா தனது போனில் க்ளிக் செய்த படங்கள் இவை.

என் உடலமைப்பு அழகாக இருப்பதாக கூறிய ஜுவாலா என் உடம்பை போட்டோ எடுத்தார். நான் அவற்றை ஷேர் செய்யலாமா? வேண்டாமா? என்று யோசித்தபோது, சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் திரைப்பட போஸ்டர் மற்றும் ரன்வீரின் போட்டோஷூட் படங்கள் ஆகியவை ஷேர் செய்யப்பட்டதாக ஜுவாலா கூறினார்.

மேலும் நான் கடினமாக உழைத்த எனது உடலமைப்பைக் காட்டுவதில் தவறில்லை என்றும் கூறினார். என்னைப் பற்றியும், எனது திரைப்படங்கள் மற்றும் நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் பற்றியும் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட கருத்து இருப்பதால், என் பன்முகத்தன்மையை மக்களுக்கு காட்ட வேண்டும் என ஜுவாலா கூறினார். அதனால்தான் இந்த போட்டோக்களை ஷேர் செய்தேன்.

எல்லாவற்றிற்கும் பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்கள் இருக்கும். அதோடு அந்த படங்கள் மோசமாக இல்லை என்றும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்துள்ளது. போட்டோக்களால் அவரது கமெண்ட் செக்ஷனும் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!