சினிமா

அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

82views

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் அண்ணாத்த திரைப்படம் வரும் 4ஆம் தேதி தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணன் தங்கை பாச பின்னணியை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி, சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பட்டையை கிளப்பியது. யூடியூபில் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடம் பிடித்தது. படத்தின் ரிலீசுக்காக தொண்டர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் இணையதளத்தில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!