உலகம்

அடுத்த சில நாட்களில் தாக்குதல்: எச்சரிக்கும் ஜோ பைடன்

43views

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ரஷியா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த எந்தவித திட்டமும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து உக்ரைன், ரஷ்ய நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!