உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்புக்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உருவாக்கி வருகிறது.இதனால் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மென்பொருள் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை அறிமுகப்படுத்தியது.
மேலும் கொரோனா அடுத்தடுத்த அலைகள் பரவக் கூடும் என நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இது குறித்து கூகுள் நிறுவன சி இ ஓ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல அலுவலகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன .
அந்த வகையில் ஆயிரக்கணக்கான கூகுள் பணியாளர்கள் தாங்களாக அலுவலகத்திற்கு மீண்டும் வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
அலுவலகத்திற்கு வர விருப்பம் தெரிவிப்பவர்கள் 30 நாள்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும்.
அலுவலகத்தில் நேரடியாக வந்து பணிபுரிபவர்களுக்கு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.