அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ராம்குமார் ராமநாதன் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ராம்குமார் ராமநாதன் ஜோடி, போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளபோஸ்னியாவின் டோமிஸ்லாவ் ப்ரிக், மெக்ஸிக்கோவின் சாண்டியாகோ கோன் சலஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் போபண்ணா, ராம்குமார் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள குரோஷியாவின் இவான் டூடிக், பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியை சந்திக்கிறது.