விளையாட்டு

அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

43views

இந்த ஆண்டு ஐபிஎல் 15ஆவது சீசன் முதல் அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளது .

சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட லக்னோ அணி , கே . எல் . ராகுலை கேப்டனாக தக்கவைத்துள்ளதாக தெரிவித்தது . மேலும் , ரவி பிஷ்னோய் , மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரையும் வாங்கியுள்ளதாக தெரிவித்தது . அணிக்கு , லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தது .

இந்நிலையில் அகமதாபாத் அணி , தங்களது அணிக்கு அகமதாபாத் டைடன்ஸ் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது . இந்த பெயர் ப்ரோ கபடி லீக் தொடரில் இடம்பெற்றுள்ள தெலுங்கு டைடன்ஸ் பெயருடன் ஒத்துப்போவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் .

இருப்பினும் , பெரும்பாலானோர் இந்த பெயருக்கு வரவேற்பை தெரிவித்து வருகின்றனர் . இந்த அணி ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக தக்கவைத்துள்ளது . மேலும் , ரஷித் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரை தக்கவைத்துள்ளது . ஐபிஎல் மெகா ஏலம் வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!