சமூக வலைதளமான ஃபேஸ்புக் (பேஸ்புக்) நிறுவனத்தின் பெயர் Meta என மாற்றம் செய்யப்பட்டுள்ளதான அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் மார்க் ஜுக்கர்பெர்க் (ஜுக்கர்பர்க்) (ஜூக்கர்பெர்ஸ்) (ஜூக்கர்பெர்க்) அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்டமாக மெய்நிகர் உலகம் அல்லது விர்ச்சுவல் உலகத்தை நோக்கு உருவாக்கப் போவதாகவும் மார்க் ஜுக்கர்பெர்ஸ் அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஃபேஸ்புக்கின் நிறுவனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் புதிய பயணமாக மெட்டாவெர்ஸ் என்கிற வெர்ச்சுவல் உலகத்தை உருவாக்க ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? அதன் சாதக பாதக அம்சங்கள் என்ன? பயனாளர்களை நீண்ட நேரம் ஆன்லைனில் தங்க வைக்கும் உத்தியா என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. மேலும் இத்தகைய விர்ச்சுவல் உலகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் எனவும் கூறப்பட்டு வந்ததது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் மாநாட்டில் பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், ஃபேஸ்புக்கின் பெயர் Meta என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் இதுவரை சமூகம் சார்ந்த விவகாரங்களில் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த நிறைய பாடங்களை வைத்து அடுத்த கட்டத்தை உருவாக்குகிறோம். எங்களது ஆப்கள், பிராண்டுகள் அப்படியே இருக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
மேலும் இப்போது முதல் மெட்டாவெர்ஸ்தான் எங்களது முதல் இலக்கு, ஃபேஸ்புக் அல்ல என்றும் அவர் கூறினார். இத்திட்டத்துக்காக தொடக்க நிலையிலேயே ரூ75,000 கோடி முதலீடு செய்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். மேலும் 10,000-க்கும் அதிகமானோரை பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தற்போது அடுத்த கட்டமாக மெடாவெர்ஸ்- Metaverse என்ற மெய்நிகர் உலகை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். விசுவல் ரியாலிட்டி (VR), ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மெடாவெர்ஸ் என்கிற இணைய மாய உலகம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான டெக் கருவிகளைப் பயன்படுத்தி மெடாவெர்ஸில் ஒருவரிடம் மற்றொருவரை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். 2016-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் தனது சந்தையை விரிவுபடுத்த ஆல்பபெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருந்தது.