தமிழகம்

தமிழர் தன்னுரிமைக் கட்சி, சென்னையில் நடத்திய முத்தமிழ்ப் பெருவிழா!

160views
தமிழர் தன்னுரிமைக் கட்சி பல ஆண்டுகளாக தமிழ்மொழி, தமிழ்நாடு, அதன் சிறப்புகள் என பலவற்றிற்கு பணியாற்றி வருகிறது. அந்த வகையில் வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு சித்திரையை வரவேற்றும் தமிழர் இனத்தின் முத்திரையாக இருந்து மறைந்த இந்தியாவின் முதல் பொதுவுடமைத் தலைவராக இருந்து பெரும் புகழாளராக விளங்கிய சிந்தனை சிற்பி ஐயா சிங்காரவேலரின் 165ஆம் ஆண்டு பிறப்பையும் அதனையொட்டி தங்கள் இனிய வாழ்வை அன்னைத் தமிழோடு இணைத்துக்கொண்டு வாழும் சிறப்பாய் செயல்படும் பெருமக்களை சிறப்பிக்க ‘தமிழ் முத்துக்கள்’ என விருதளித்து பெருமைப்படுத்தும் வகையில் சென்னை தியாகராய நகரில் இருக்கும் செ நாயகம் பள்ளியில் கடந்த புதன் கிழமை (2.4.2025) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர் தன்னுரிமைக் கட்சி தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் ‘தமிழா தமிழா’பாண்டியன் வரவேற்புரையாற்ற்றினார். மக்கள் தேசிய கட்சித் தலைவர் சே ம நாராயணன், தமிழறிஞர் மூத்த ஏட்டாளர் அறிஞர் அருகோ, தமிழ்நாடு சோசலிச கட்சி தலைவர் தஞ்சை இளஞ்சியங்கள், கடல்சார் மக்கள் நலச்சங்கமம் தலைவர் பிரவீன்குமார் பரதவர், மின்னல் கலைக்கூடத்தின் தலைவர் கவிஞர் கார்முகிலோன், தமிழர் தன்னுரிமைக் கட்சி மகளிரணி தலைவி தேவி முருகன் என பலரும் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்வில் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன், புதுவை தமிழமல்லன், புதுக்கோட்டை வைர நா தினகரன், கரு சந்திரசேகரன், விசவனூர் தளபதி, கவிச்சுடர் சிந்தை வாசன், கா தேவேந்திரன், கவிஞர் தாமரைப்பூ வண்ணன், முனைவர் மாணிக்காத்தாள், கவிஞர் வசீகரன், கள் தீனதயாளன், கவிஞர் பட்டுராசபாரதி, பாக்கம் பிரதாப சிம்மன் என பலருக்கும் தமிழ்முத்துக்கள் விருதுக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அயனாவரம் இராம பாபு ஒருங்கிணைத்து நடத்த, பொதிகை தென்றல் வேலுசுபராசர் நன்றியுரையாற்ற விழா இனிதே நடந்தேறியது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!