தமிழகம்

அமைச்சர் தங்கம் தென்னரசு தகப்பனார் முன்னாள் அமைச்சர் அமரர் வே.தங்கப்பாண்டியன் 27 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

32views
31.07.2024 அன்று விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு அரசு நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் தகப்பனார் முன்னாள் அமைச்சர் அமரர் வே.தங்கப்பாண்டியன் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்கள் பங்கேற்றார்.
முன்னதாக கல்குறிச்சி சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ இப்ராஹிம்ஷா அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் எஸ்.முகமது,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட அமைப்பாளர் மௌலவி ஐ. அப்துல் அஜீஸ், திருச்சுழி சட்டமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் சாகுல் ஹமீது , அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் எஸ்.முகமது சம்சுதீன், சிவகாசி சட்டமன்ற தொகுதி செயலாளர் டி.சாகுல் ஹமீது, பூலாங்கால் பிரைமரி தலைவர் ஏ.அப்துல் காதர் காரியாபட்டி இந்திய முஸ்லிம் லீக் தலைவர் அக்பர்பாஷா, தொழில் அதிபர் இர்ஷாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!