தமிழகம்

மதுரையில் படிக்கும் போதே லேசா அசந்த சிறுவன் வீடியோ வைரல்

316views
சமூக வலைதளத்தில் ட்ரெண்டுகள் ஏராளம். நாட்டு நடப்பில் இயல்பாக நடக்கும் குட்டிக் குட்டி விசயங்கள் கூட பார்வையாளர்களை கவர்ந்து அதிகம் பகிரப்படுகிறது. இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த சிறுவன் மாலை வேளையில் படித்துக் கொண்டிருக்கும் போதே அசந்து தூங்க முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். க், ங், ச் முதலியன மெய் எழுத்துகள் எனப்படும். இந்நிலையில் இந்த பாடத்தை சிறுவனின் பெற்றோர் பள்ளி முடிந்தது வீட்டுப்பாடமக மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்துள்ளனர். இதனை கேட்டபடி படித்த அந்த சிறுவன் உண்ட மயக்கத்தில் லேசாக கண் அசந்த படி படிக்கிறான். ஆனால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத சிறுவன் தூங்கி வழியும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!