தமிழகம்

வேலூர் அடுத்த குடியாத்தம் புகழ்மிக்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் கோலாகலம், பக்தர்கள் வழிபாடு

96views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய நதிக்கரையோரத்தில் உள்ள கெங்கையம்மன் சிறப்புமிக்கது, அதன் திருவிழாவும் மாவட்டயளவில் பெரியது.  நேற்று தேரோட்டம் நடந்தது.  வைகாசி மாதம் முதல் தேதியென்று சிரசு ஊர்வலம் திருவிழா நடைபெறுவது வழக்கம்,
அதன்படி திங்கள்கிழமை (15-ம் தேதி) விடியற்காலை தர்ணாம்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆராதனை பூஜை செய்யப்பட்டு, விடியற்காலை 5 மணியளவில் கங்கை அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு தரணம்பேட்டை, என்.ஜி.ரெட்டி தெரு, கோபாலபுரம் வழியாக கங்கையம்மன் கோயிலை வந்தடையும், ஊர்வலமாக வரும் சிரசுக்குவழிநெடுகிலும் தாரை, தப்பட்டையுடன் இளைஞர்கள் வரவேற்பு அளிப்பார்கள், பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை செலுத்துவார்கள்.

சிரசு காலை கோயிலை வந்தடைந்தது. பிறகு சண்டாளி உடலில் சிரசு பொறுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  வேலூர் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை அரசு விடுமுறை விடப்பட்டது.  வேலூர் மாவட்டத்தில் உள்ள பக்தர்களும், ஆந்திரா, கர்நாடக பக்தர்களும் கெங்கை அம்மனை வழிப்பட்டனர். குடியாத்தம் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!