தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி கருத்தரங்கம்

114views
வேலூர் மாவட்ட கல்வித்துறையின் கீழ் இயங்கும் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி கருத்தரங்கம் வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம் துவங்கியது.
பள்ளி முதல்வர் லில்லி கிரேஸ் தலைமை தாங்கினார். ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்தனன் வரவேற்றார். ரெட்கிராஸ் மாவட்ட தலைவரும், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை)அங்கு லட்சுமி பயிற்சியினை துவக்கிவைத்தார்.

ஜாக்டோ ஜியோ மாநில குழு உறுப்பினர் சேகர், தொழிற்கல்வி ஆசிரியர் சச்சிதானந்தம், ரோட்டரி இன்டர்நேஷனல் சங்க கல்வி குழுத் தலைவர் ஜோசப் அன்னையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வெள்ளிக்கிழமை இந்த பயிற்சி கருத்தரங்கம் முடிவுபெறும்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!