தமிழகம்

ஜப்பான் ஷிட்டோரியோ,-சுக்கோகாய் இசூஷி கராத்தே பள்ளி சார்பில் காட்பாடியில் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வி.ஐ.டி. காதம்பரி ச.விசுவநாதன் வழங்கினார்.

99views
வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் இயங்கிவரும் வேலூர் மாவட்ட கிளையான ஜப்பான்-ஷிட்டோரியோ, சுக்கோ காய் இசூஷி கராத்தே பள்ளி சார்பில் இதில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு வேலூர் வி. ஐ.டி. அருகில் உள்ள வில்லியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை உதவி தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வழங்கினார்.  பள்ளிதலைமை ஆசிரியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.

 

சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வி.ஐ.டி.துணை உதவி தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், வழக்கறிஞர் சங்க பொதுச் பொதுச்செயலாளர் அங்கயற்கன்னி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமலை தமிழரசன் ஆகியோர் பெல்ட், சான்றிதழ்களை வழங்கினார்கள்.  தமிழ்நாடு கிராமிய விளையாட்டு சங்க தலைவரும், தமிழ்நாடு கோ – கோ. – தலைவருமான டாக்டர் எம்.ஆர்.ரெட்டி, காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வரபிள்ளை மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், சீனிவாசன், பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், கரிகிரி பஞ்சாயத்து தலைவர் தேவராஜ், கார்ணாம்பட்டு பஞ்சாயத்து தலைவர் ரஞ்சித், காந்திநகர் வாசுதேவன், ‘கராத்தே பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாட்டை பயிற்சி பள்ளியின் நிர்வாகிகராத்தே பயிற்சியாளர்  பிரம்மபுரம் மகேஷ் செய்திருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!