தமிழகம்

வேலூர் தோட்டப்பாளையம்சத்திரம் மண்டபத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு அறநிலைத்துறை சார்பில் அன்னதானம் துவக்கம்

189views
தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை சார்பில் ஆடிகிருத்திகை முன்னிட்டு வேலூர் தோட்டப்பாளையம் அறநிலைத்துறைக்கு சொந்தமான சத்திரம் மண்டபத்தில் பக்தர்களுக்கு நேற்று முன்தினம் பகல் அன்னதானத்தை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவக்கிவைத்தார்.  அதில் கோயில் செயல் அலுவலர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் அறநிலைத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கிருத்திகை நண்பகலில் மட்டும் வாழை இலையில் அரிசி சாதம், பொரியல், வடை, பாயாசம், சாம்பார், ரசம், மோர் ஆகியவை பரிமாறப்பட்டது.  தினமும் 500 – க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் சாப்பிட்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!