தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் பந்தா காட்டிய ஆணையர் – வெளுத்து வாங்கிய பிஜேபி சிறுபான்மை தேசிய செயலாளர்

131views
வேலூர் மாவட்ட பிஜேபி அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் தேசிய பிஜேபி சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில பொதுச் செயலாளர்  கார்த்தியாயிணி கலந்துகொண்டனர்.இதில் கார்த்தியாயிணி பேசினார்.  பின்பு வேலூர்  மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சாலை வசதி இன்மை, குடிநீர் பிரச்னை, சுகாதார சீர்கேடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, மனு கொடுக்க பிஜேபியினர் முடிவு செய்தனர்.  பிஜேபி சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் கொடுக்க இருப்பதாக மாநகராட்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு பிஜேபியினர் தகவல் கொடுத்தனர்.

ஆனால் வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி 45 நிமிடம் பந்தா காட்ட ஆரம்பித்தார்.  முன்பாக அலுவலர்களுக்குரியூமீட்டிங், பாத்ரூம் போய் வந்தேன் சுமார் 45 நிமிடம் தன்னுடைய பந்தாவை காட்டினார்.  பின்பு 45 நிமிடம் வேலூர் இப்ராஹிம் வெளியில் உட்காரவைத்து பின்பு மனு கொடுக்க வாருங்கள் என்றார் ஆணையர்,  பின்பு சென்ற இப்ராஹிம் வேலூர் மாநகர மக்களின் பிரச்னைக்காக மனு கொடுக்க வந்தால் தேசிய பிஜேபி சிறுபான்மை பொறுப்பாளர்களை அவமானம் படுத்தும் நோக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது.  முதலில் மாநகர மக்கள் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுங்க! என்று விளாசினார்.  உடன் வேலூர் மாநகர பிஜேபி நிர்வாகிகள் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!