தமிழகம்

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

43views
வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு உருது அகாடமி மற்றும் இந்தியன் அபாகஸ் இணைந்து வழங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.  வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் உருது வட்டார கல்வி அலுவலர் ஆர். நாசருத்தீன் வரவேற்புரை ஆற்றினார்.  இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு உருது அகாடமியின் துணைத் தலைவர் டாக்டர்.முஹம்மத் நயீமுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்۔  இந்தியன் அபாகஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் பஷீர் அகமத் இந்நிகழ்ச்சி பற்றிய அறிமுக உரை ஆற்றினார்.
தமிழ்நாடு உருது அகாடமியின் உறுப்பினர் அக்பர்ஹான், வேலூர் காட்பாடி வட்டார கல்வி அலுவலர் மேரி சுமதி பாய், ராணிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் சாந்தி, தமிழ்நாடு உருது வழி பள்ளிகளின் மாநில பொதுச் செயலாளர் ஷானவாஸ், தமிழ்நாடு உருது பள்ளி ஆசிரியர் சங்கங்களின் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர். முஹம்மத் அஜ்மல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  தமிழ்நாடு உருது அகாடமியின் துணைத் தலைவர் டாக்டர்.முஹம்மத் நயீமுர் ரஹ்மான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தனது தலைமை உரையில் விரிவாக விளக்கி கூறினார்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அபாகஸ் கருவி மூலம் கணித செயல்பாடுகள் மிகச் சிறப்பாக செயல்வழி செயல்முறை மூலம் விளக்கம் அளிக்கப் பட்டது۔ இறுதியாக தமிழ்நாடு உருதுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைவர் ஆ. சையத் சிராஜுதீன் நன்றியுரை ஆற்றினார்.  இந்த கூட்டத்தில் திரளாக உருது பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!