தமிழகம்

சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனின் இலாகா பறித்த பின்னணி என்ன?

87views
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் துரைமுருகன், திமுக ஆட்சியில் வந்தால் அடைச்சராக இருப்பார். அதன்படி தற்போது திமுக ஆட்சியில் கனிமம், நீர், சுரங்கம் ஆகிய இலாக்கக்கள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் 8-ம் தேதி இந்த இலாகா பறிக்கப்பட்டு சட்டத்துறை மட்டும் கொடுக்கப்பட்டது. இதன் பின்னணி குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வருக்கு அடுத்தப்படி சீனியர் மந்திரியாக இருந்ததால்… இந்த துறையின் கலெக்ஷன் மேலிடத்திற்கு முறையாக செல்லவில்லை என்று உறுதி ஆன நிலையில் கிச்சன் கேபினட் முடிவு படி மாற்றப்பட்டு, முறையாக கலெக்ஷன் கொடுக்கும் புதிய அமைச்சருக்கு மாற்றப்பட்டதாக தகவல் கூறுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு புதிய சட்டசபை கட்டுமான முறைகேட்டில் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் ஈடுப்பட்டபோது, முதல்வர் கருணாநிதி, பதவியை பறித்து சட்ட மந்திரியாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப் பாணியை தான் முதல்வர் ஸ்டாலின் எடுத்து உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!