தமிழகம்

வேலூர் அண்ணாகலையரங்கம் ரூ.5 கோடியில் அதிநவீன அரங்கமாக புரைமைப்புக்கு ஒதுக்கீடு

79views
வேலூர் ஆபீசர்ஸ் லைனில் அண்ணா கலையரங்கம் பொழுது போக்கு அரங்கமாக (சினிமா, நாடகம்) கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டது.  இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மற்றும் விளம்பர துறை மானிய கோரிக்கையில் புனரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் குளிர்சாதன வசதி, வாகன நிறுத்தம், புதிய கழிவறைகள், ஜெனரேட்டர், நவீன எல்இடி, விளக்குகள், ஒலி அமைப்புகள், கண் கானிப்பு கேமராக்கள் என நவீன குளிருட்டப்பட்ட அரங்கமாக மாற்றப்பட உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!