தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தை அதிரடியாக ஆய்வு செய்த ஆட்சியர் ! மாநகராட்சி ஆணையர்

25views
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிறு, சிறு கடைகளை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர்.  மேலும் பஸ் நிலையம் சுகாதார சீர்கேடுகளுடன் இருப்பதால் பயணிகள் முகம் சுளித்து சென்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தன.  காலையில் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி காலையில் ஆய்வு மேற்கொண்டனர்.  தொடர்ந்து மாலையில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
ஏலம் எடுத்து நடத்தும் கடைகாரர்களை தவிர்த்து, ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், பயணிகளுக்கு விற்கப்படும் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்று உத்தரவிட்டார்.  மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்துறையினரும் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!