தமிழகம்

பெண்களை இழிவாக பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடைப்பம் முறத்துடன் ஆர்ப்பாட்டம்

64views
வேலூர் மாவட்டம் குடியாத்தம்பகுதியை சேர்ந்த குமரன் திமுக பிரமுகர். இவன் பொதுவாக வளைதளத்தில் எதிர்கட்சியினரை கேவலமாக பேசுபவன். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பெண்களை கேவலமாக பேசி வலைதளத்தில் வெளியிட்டு உள்ளான். இதனை கண்டித்து பாஜகவேலூர் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் மஞ்சு, நகர தலைவி ரேகா, செயலாளர் ஸ்ரீதேவி, மாவட்ட துணைத்தலைவி ப்ரியா,செயலாளர் கவிதா, செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி துடைப்பம், முறத்துடன் குமரன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் மற்றும் வசைபாடினர்.பின்பு விரைந்து வந்த காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!