தமிழகம்

வேலூரில் தொலைந்த செல்போனை மீட்க புதிய வாட்ஸ்ஆப்: 9486214166: போலீஸ் வெளியீடு

31views
தற்போது பொது இடங்களில் செல்பவர்களின் செல்போன்களை மர்மநபர்கள் திருடி செல்கின்றனர்.  தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.  இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தொலைக்கும் மற்றும் திருடப்படும் செல்போன்களை விரைவில் கண்டுபிடித்து தரும் வகையில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் செல் டிராக்கர் என்ற பெயரில் 9486214166 என்ற புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செல்போனை தொலைத்தவர்கள் 9486214166 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஹாய் என்று மெசேஜ் அனுப்பி தொலைந்த போனின் ஐஎம்ஐஎண்ணையும் உரிமையாளரின் விவரங்களையும் அனுப்பிவைக்க வேண்டும்.  பின்னர் தொலைந்த செல்போனை டிராக் செய்து விரைவில் கண்டுபிடித்து தருவார்கள், போலீஸ் நிலையம் சென்று புகார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  இந்த நிகழ்ச்சி வேலூர் எஸ். பி.அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி துவக்கிவைத்தார். உடன் எஸ்.பி.மணிவண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!