தமிழகம்

வேலூர் மாவட்டஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோரிக்கை மாநாடு

110views
வேலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கோரிக்கை மாநாடு காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.  வேலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.லதா தலைமை தாங்கினார்.துணைச்செயலாளர் துரைசெல்வம் வரவேற்றார்.  மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் மாநாட்டு உரையாற்றினார்.  திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சுந்தரேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கீழ்கண்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  வேலூர் மாவட்டத்தில் 90 ஏக்கர் முந்திரி தோப்பு பகுதியில் சிப்கார்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும், மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் – சாலை, ரேசன், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்ட பொருளாளர் எஸ்.காவேரி நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!