தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி மூளையில் அரிய அறுவை சிகிக்சை செய்து மருத்துவர்கள் சாதனை !!

55views
வேலூர் தனியார் நறுவீ மருத்துவமனையில் ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த முரளி (55). இவர் மூளையில் ரத்த குழாய் வெடித்து வீக்கத்துடன் சுயநினைவின்றி பாதிக்கப்பட்ட இவருக்கு மருத்துவமனை மூளை அறுவை சிகிச்சை நிபுணர் பால்ஹென்றி தலைமையில் மருத்துவர்களும், இதய அறுவை சிகிச்சை நிபுணர் விநாயக்சுக்லா தலைமையில் சுமார் 8 மணிநேரம் தீவிர முயற்சியில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.   இந்த அறுவை சிகிச்சைமுறை நாட்டிலேயே முதன்முறையாக நடைபெற்றதாக கூறப்பட்டது.  முரளியை செய்தியாளர்களிடம் அறிமுகபடுத்திய நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.
பேட்டியின்போது மருத்துவமனை சேவைகளின் தலைவர் அரவிந்த் நாயர், கண்காணிப்பாளர் ஜேக்கப்ஜோஸ் மற்றும் மருத்துவர்கள் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!