தமிழகம்

புதிய பாரதம் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் மாநில நலச்சங்க சார்பில் நலத்திட்ட உதவிகள்

27views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்கள் சங்கம் துவக்கவிழாவும் நடந்தது.  இதன் நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சீதா வரவேற்றார்.  அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.டி.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். வேலூர் மாநகராட்சி 6-வது வார்டு உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!