தமிழகம்

வேலூர் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொலை வழக்கு தண்டனை கைதி கைது

208views
வேலூர் அடுத்த காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை பகுதியை சேர்ந்த யாசகர் தயானந்தகிரி (45) கடந்த 2023-ல் காட்பாடி காவல்நிலையம் அருகில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் அடித்து கொல்லப்பட்டார்.  இது சம்மந்தமாக கேரளாவை சேர்ந்த மற்றொரு யாசகன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவனுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.   இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை,3 பாதுகாப்பு இருந்தும் தப்பி ஓடினான்.
இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து யாசகனை வலைவீசி தேடி வந்த நிலையில் இன்று காலை பாகாயம் அருகே மறைந்து இருந்தபோது தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!