தமிழகம்

வேலூரில் புத்தம் புதிய பொலிவுடன் வாசன் கண் மருத்துவமனை துவக்கம்!

91views
வேலூர் வாசன் கண் மருத்துவமனை புத்தம் புது பொலிவுடன் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன உலகத் தரம் வாய்ந்த வேலூர் வாசன் கண் மருத்துவமனையை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத் தலைவர் ஜீ.ஜோதியப்பன் திறந்து வைத்தார்கள்.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு வாசன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் கே.கமல் பாபு, மற்றும் மருத்துவமனையின் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருத்திகா, விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திவ்யா சக்தி திவாரி, கண் மருத்துவர்கள் டாக்டர் எஸ்.ஃபரூக் அகமது, மற்றும் டாக்டர் சிரிஷா, பங்கேற்று சிறப்பு செய்தனர்.
வாசன் கண் மருத்துவமனை புதுப்பொலிவுடன் முற்றிலும் குளிர் ஊட்டப்பட்ட அனைத்து அதிநவீன வசதிகளுடன் கூடிய பரிசோதனை அறைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அறுவை சிகிச்சை அரங்கங்கள் சிறந்த கல்வி தகுதியுடன் முன் அனுபவம் வாய்ந்த சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் வாசன் கண் மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!