தமிழகம்

வேலூர் அடுத்த அணைக்கட்டுமகமது புரத்தை சேர்ந்த அருள் மூளை உயிரிழப்பு, உறுப்பு தானம் !!

92views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மகமதுபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் அருள் (24). கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலை விபத்து ஏற்பட்டு ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்த்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மூளை உயிரிழப்பு ( சாவு) ஏற்பட்டது. அவரின் உறவினர்களின் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தானம் கொடுக்க முன்வந்தனர். அதன்படி இதயம், கண்கள், சிறுநீரகம், மற்றும் இதர உறுப்புகள் பெறப்பட்டது.  சிலருக்கு வாழ்வு கொடுத்த அருளின் உடலுக்கு நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!