தமிழகம்

வேலூரில் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

90views
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஊழல் செய்த திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவிநீக்கம் செய்ய கோரி வேலூர் மாவட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர் கே அப்பு தலைமை தாங்கினார்.  புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மாநில மாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபு, மாவட்ட பொருளாளர் மூர்த்தி, முன்னாள் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் ராமு, சுபாஷ், பகுதி செயலாளர் நாராயணன், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!