தமிழகம்

பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா பயணம் ரயில்வேயில் அறிமுகம்: தென்மண்டல பொதுமேலாளர் ரவிக்குமார் தகவல்!

196views
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் கூறியதாவது:
இந்தியன் ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா பிரிவு சார்பில்  சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலாப் பயணத்தை அறிமுகம் செய்துள்ளது .  இதில் 14 பெட்டிகள் உள்ளன.  இந்த சிறப்பு சுற்றுலா ரயிலில்  3 குளிர்சாதன பெட்டிகள்,  8 ஸ்லீப்பர் கோச்சுகள், 1 பேண்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளது.  ஜூலை 1ம் தேதி  கொச்சுவேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில்  11 இரவுகள் மற்றும் 12 நாட்கள் கடந்து செல்லும் என திட்டமிடப்பட்டுள்ளது.
கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர், வழியாக சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு, ஹைதராபாத், ஆக்ரா, மதுரா வைஷ்ணவ தேவி(கட்ரா) , அமிர்தசரஸ், புதுதில்லி ஆகிய இடங்களை பார்வையிட்டு அங்குள்ள முக்கிய சுற்றுலா மற்றும் சமய ஸ்தலங்களை பார்வையிட்டு விட்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இதற்கான பயணக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ஸ்லீப்பர் வகுப்பு ரூபாய் 22 ஆயிரத்து 350 ரூபாயும்,  குளிர் சாதன வசதியுடனான பெட்டியில் ரூபாய் 40 ஆயிரத்து 380 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேட்டியில் ரவிக்குமார் குறிப்பிட்டு கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!