தமிழகம்

வேலூர் அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளூவர் பல்கலை. பட்டமளிப்பு விழா – மத்திய அமைச்சர், ஆளுநர் பங்கேற்பு

141views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது.  இதனுடைய 17-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் 19-ம் தேதி காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது.  தமிழக ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தருமாருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்குகின்றார்.
சிறப்பு விருந்தினராக சாலை போக்குவரத்து மற்றும் சிவில்விமான போக்குவரத்து மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.  தமிழ்நாடு உயர்கல்வி துறைச் அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
ஏற்பாடுகளை துணைவேந்தர் ஆறுமுகம், பதிவாளர் (பொ) விஜயராகவன் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!