தமிழகம்

வேலூரில் மத்திய பட்ஜெட் மற்றும் நீட் தேர்வை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

24views
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய அரசின் மத்திய பட்ஜெட்டை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் வேலூர் மண்டல ம தி மு க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் நகர பொறுப்பாளர் கோபி தலைமை தாங்கினார் ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் கண்ணதாசன் வாணியம்பாடி நசீர் கான் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை சேர்ந்த சிறப்பு அழைப்பாளர் பாசறை பாபு கண்டன உரை நிகழ்த்தினார்.
காட்பாடி ஒன்றிய செயலாளர் பிரம்மபுரம் ஆறுமுகம், ராமமூர்த்திஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!