தமிழகம்

வேலூர் ஆவினில் பால் திருட்டை தடுத்த உதவி பொதுமேலாளருக்கு கொலை மிரட்டல் !

98views
வேலூர்சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் உள்ளது.  இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமிரி வழித்தடத்தில் கொண்டுசெல்லப்படும் பால்வண்டியில் பால் திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  மேலும் தொடர்ந்து கண்காணித்ததில் ஆவின்பால் திருட்டு சம்பவம் தொடர்கதையானது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு பல மாதங்களாக ஒரே பதிவெண் கொண்ட 2 வேன்களில் தொடர்ந்து 2,500 லிட்டர் பால் கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது குறித்து ஆவின் அதிகாரிகள் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் கொடுத்து அந்த 2 வேன்களை பறிமுதல் செய்து ஆவின் வளாகத்தில் சீல் வைத்தனர்.  இதற்கு பிறகு நேற்று முன்தினம் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் ஆவின் விற்பனை பிரிவு உதவி பொதுமேலாளர் சிவக்குமார் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நேற்று முன்தினம் நானும் பொதுமேலாளரும் பால்பண்ணையை மேற்பார்வையிட சென்றபோது பிடித்து வைத்திருந்த 2 ஒரே பதிவெண் கொண்ட வண்டியை அதன் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் அவரின் டிரைவர விக்கி ஆகிய இருவரும் போலி பதிவெண் கொண்ட வாகனத்தை இரவு 11.30 மணியளவில் (நான் பணியில் இருந்தபோது) எடுக்க முயற்சி செய்தனர்.
அதை நான் தடுத்த போது சிவக்குமார் என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி, டிரைவர் விக்கியை பார்த்து வண்டியை எடுக்க சொல்லியும், தடுத்தால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி 2 வண்டிகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.  கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க என்று கூறியுள்ளார்.  வழக்கம்போல் வழக்கை பதிவு செய்து காவல்துறையினர் மெதுவாக விசாரணை செய்துவருகின்றனர்?  பால் பாகெட் போன்று மற்ற ஆவின் பொருள்களும் அதிகயளவு மாயமாகி உள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் புலம்புகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!