தமிழகம்

வேலூர் ஆவினில் தொடரும் தில்லுமுல்லுகள் – ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள் – தில்லாலங்கிடி

138views
வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பாலகம் உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு பால்பொருட்கள் தயாரிக்கப்பட்டு முகவர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்த அலுவலகத்தில் பால் திருட்டு அதிகயளவுகடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இதனை தடுக்க இரவில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுப்பட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு திமிரி வழித்தடத்தில் கொண்டு செல்லப்படும் பால்வண்டியில் பால் திருடிச் செல்வது தெரியவந்தது.  இதனை கண்டுபிடித்த ஆவின் பொறியியல் பிரிவு மேலாளர் கனகராஜ் தாக்கப்பட்டார். இதன் வழக்கு சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த பிரச்னையை தொடர்ந்து கண்காணித்ததில் ஆவினில் பால் திருட்டு தொடர்கதையாகி வருவது அம்பலமாகி உள்ளது.  பால் திருட்டை கண்காணித்தபோது வேலூர் ஆவினில் இரவில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடி சென்றது தற்போது அம்பலமாகி உள்ளது.

இதுகுறித்து வட்டார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 2 வேன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.  தினமும் 2,500 லிட்டர் பால் திருடியிருப்பதும் இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.  இதுப்போல் மற்ற பால்பொருள்களின் எண்ணிக்கையில் பல தில்லுமுல்லுகள் நடந்து இருக்கும்.
இதனை அதிகாரிகள், ஆடிட்டர்கள் ஆய்வு செய்தால் வேலூர் ஆவினில் தற்போது நடைபெற்று வரும் கொள்ளை வெளிச்சத்துக்கு வரும்….?
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!