தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2.5 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கும் இரண்டு கால் செயலிழந்த ஆணுக்கும் திருமணம்

62views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த லேட் மஞ்சுநாதன் காயத்ரி தம்பதியருக்கு ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் மூத்த மகளான கீர்த்தனா என்பவர் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.  இவர் உயரத்தில் 2.5 அடி உள்ளார். இந்த நிலையில் கீர்த்தனாவின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
குடியாத்தம் சித்தூர் கேட் காதர்பேட்டையை சேர்ந்த டீக்கடை நடத்தி வந்த துரைசாமி சரஸ்வதி தம்பதியருக்கு மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். இதனைத் தொடர்ந்து துரைசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
துரைசாமியின் ஒரே மகன் சரவணன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். அவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இரண்டு கால்களும் போலியோ நோயினால் செயலிழந்து விட்டது. தந்தை நடத்தி வந்த டீக்கடையை தற்போது சரவணன் நடத்தி வருகிறார்.
சரவணனின் தாயார் சரஸ்வதி தன் மகனுக்கு திருமணமாக வேண்டும் என பல கோவில்களுக்கு சென்று வேண்டியதாக கூறப்படுகிறது. உறவினர்களின் தகவலின் பெயரில் சரவணனுக்கும் கீர்த்தனாவுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்வ பெருமாள் கோவிலில் இன்று திருமணம் செய்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும் எனவும் தனது மனைவி பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் சரவணன்.
2.5 அடி உயரம் உள்ள பெண்ணுக்கும் இரண்டு கால்களும் போலியோ நோயினால் செயலிழந்த ஆணுக்கும் திருமணம் நடந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியாகவும் வியப்புடன் வாழ்த்தி சென்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!