தமிழகம்

வேலூர் சன்பீம் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற திருவள்ளூவர் பல்கலை. துணைவேந்தர் !!

65views
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக் குளத்தில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் ஹரி கோபாலன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்க பிரகாஷ் , முதல்வர் ரத்தீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராக வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு, கேடயம், வழங்கினார்.  குழந்தைகள் நல மருத்துவர் அருளாளன், பள்ளி துணைத்தலைவர்கள் ஜார்ஜ் அரவிந்த், ஜோன் ஆர்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் ஆசிரியைகள், பள்ளி பணியாளர்கள், மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!