தமிழகம்

அரசு துறைகளில் உள்ள காலிபணி இடங்களை நிரப்ப வேலூரில் நடந்த அரசு பணியாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

137views
தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
மாநிலத் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில கெளரவத் தலைவர் சி. ராஜவேலு, மாநில பொதுச்செயலாளர் தொல்காப்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் தமிழக அரசு பணியாளர்களுக்கு முன்புபோல வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்ய வேண்டும், அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  தோட்டக்கலைப் பண்ணைகளில் 10 ஆண்டுகள் பணி முடித்ததினக்கூலி பணியாளர்களுக்கு நிரந்தரம் செய்ய வேண்டும், பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, பதவி உயர்வு, குடும்பநல நிதி வழங்க வேண்டும், மத்திய அரசு அகவிலைப்படி அறிவிக்கும் அதே நாளில் மாநில அரசும் அகவிலைப்படி வழங்கவேண்டும், உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்ட தலைவர் ரமேஷ், சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், அலுவலக உதவியாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!