தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனை சாதனைகளை பட்டியலிட்ட இயக்குநர் விக்ரம் மேத்யூஸ்

51views
இந்தியாவின் புகழ்மிக்க வேலூர் சிஎம்சி மருத்துவமனை வேலூரில் இயங்கிவருகிறது. இதன் இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:  வேலூரில் புகழ்மிக்க சிஎம்சி மருத்துவமனை கடந்த 123 ஆண்டுகளாக இயங்கிவருகின்றது.  2020 – முதல் 2023 வரை ஏழை – எளிய நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவ சேவை செய்து உள்ளோம். 309 கோடி ரூபாய் அவர்களுக்கு பணம் பெறாமல் சேவை செய்து உள்ளோம்.  கொரானா காலகட்டத்தில் 1500 நோயாளிகளை காப்பாற்றி உள்ளோம்.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை வளாகத்தில் இந்திய பிரதமர் மற்றும் தமிழக காப்பீட்டு திட்டத்தை அமுல் படித்தி வருகிறோம்.  4 மாவட்டங்களை சேர்ந்த 1700-க்கு மேற்பட்டவர்களை விபத்து சிகிச்சையில் காப்பாற்றி உள்ளோம்.  நோய்களிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றிகொள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து உள்ளோம்.  என்று அவர் கூறினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேஷ், மக்கள் செய்தி தொடர்பாளர் துரை ஜாஸ்பர் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!