தமிழகம்

வேலூரை அடுத்த கருங்கம்பத்தூரில் நடைப்பெற்ற ஜூடோ விளையாட்டு போட்டி

112views
இன்று (18:11:23 ) வேலூரை அடுத்த கருங்கம்பத்தூர் யுவஸ்ரீ நிவாஸ் என்ற இடத்தில் 4வது மாநில அளவிலான பார்வை குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர் ஜூடோ விளையாட்டு போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 228 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக V.G. அரி துளசிராமன், Dr.பிரகாஷ் ஐயப்பன், MA.ராஜா, ஸ்ரீனிவாசன் அட்வகேட், குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கினர். வேலூர் மாவட்ட ஜூடோ சங்க தலைவர் அட்வகேட் V.சுரேஷ் பாபு பயிற்சியாளர் Dr. உமா சங்கர், Rev. Sis. சபீனா மேரி, ஜூடோ சங்க மண்டல செயலாளர் D. நோபல் லிவிங்ஸ்டன், வேலூர் ஜூடோ சங்க மாவட்ட செயலாளர் CJ. சக்திவேல்,sis. டெல்சி, சுனில் ஜுமாஞ்சி, ராஜ்குமார், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கண்டுகளித்தனர். கண் குறையுடையோர் விளையாட்டு போட்டியை V.G. ஹரி துளசிராமன் துவக்கி வைத்தார். காது கேளாதோர் போட்டியை டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் துவக்கி வைத்தார்.

இப்போட்டியின் அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக ஜூடோ அமைப்பின் தலைவரும், யுவஸ்ரீ நிவாஸ் உரிமையாளருமான Dr.M.சரவணகுமார் அனைவரையும் வரவேற்று சிறப்பு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். முடிவில் வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பைகளையும்,சான்றிதழ்களையும் ,பதக்கங்களையும் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்கள் பஞ்சாப் அமிர்த சரஸ் என்ற இடத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : D நோபல் லிவிங்ஸ்டன், வேலூர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!