தமிழகம்

வேலூர் பிராமணர் சங்க செயற்குழுக்கூட்டம் : தீர்மானங்கள் நிறைவேற்றம்

125views
வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் பிராமணர் சங்க கூட்டம் நடந்தது.  வேலூர் கிளைச் சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.  பெண்களுக்கு இடஒதுக்கீடு மத்திய அரசு 33 சதவீதம் வழங்கியது போல் மாநில அரசும் வழங்க வேண்டும், பிராமண சமூதாயத்திற்கு நலவாரியம் அமைக்க வேண்டும், நலியுற்ற பிராமண ர்களுக்கு வஸ்திரதானம், தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொதுச்செயலாளர் சேகர்,
துணைத்தலைவர் வெங்கட், பொருளாளர் ராஜகோபால் மகளிரணி செயலாளர் சுகந்தி, ஆலோசகர் சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, கணபதி, லட்சுமணன், மகளிர் அணிசெயலாளர் லலிதா மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  சங்க செய்தி தொடர்பாளர் க.ராஜா நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!