தமிழகம்

வேலூர் டிஐஜியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 29 லட்சம் ரூபாய் மோசடி செய்த வேலூர் மாநகர மாவட்ட அமமுக செயலாளர் மீது புகார்

91views
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஐஜி முத்துசாமி தலைமையில் நடந்தது.  இதில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா சீக்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  காட்பாடியை சேர்ந்த அமமுகவேலூர் மாவட்ட செயலாளர் ஏ. எஸ். ராஜா தனியார் மற்றும் அரசு கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் பணம் கேட்டார்.அதனை நம்பி எனது வீட்டை அடமானம் வைத்து ரூபாய் 9 லட்சம் கொடுத்தேன்.  ஆனால் வேலை வாங்கித் தராமல் தட்டி கழிக்கிறார் எனவே அவரிடம் பணத்தைப் பெற்று தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாக்கியா காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த மகாலட்சுமி ஆகியோர் அளித்த மனுவில்கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா 10 லட்சம் வீதம் ரூ 20 லட்சம் பெற்றுக் கொண்டு இதுவரை வேலை வாங்கித் தரவில்லை,மேலும் பணத்தைக் கேட்டால் சரியாக பதில் அளிக்காமல் காலத் தாழ்த்தி வருகிறார் என்று கூறியுள்ளனர்.  இவர்களைப் போல் மேலும் பலரும் பணத்தை வாங்கிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிய வேலூர் மாநகர மாவட்ட அமமுகசெயலாளர் ஏ எஸ் ராஜா ஏமாற்றியதாக கூறப்படுகிறது.  இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு டிஐஜி முத்துச்சாமி உத்தரவிட்டார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!