தமிழகம்

வேலுார் ஆட்சியர் காரில் ஜப்தி நோட்டீஸ் : இழப்பீடு வழங்காததால் பரபரப்பு

141views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த இளையநல்லூர் கிராம பகுதி மத்திய மின் தொகுப்பு மையம் (பவர் கிரிட்) அமைக்க 2013 -ல் ஆண்டு விவசாய நிலங்கள் கையப்படுத்தப்பட்டு மின் தொகுப்பு மையம் அமைக்கப்பட்டு 19 விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை. எனவே சப் – கோர்ட்டில் வழங்கு தொடர்ந்தனர்.  ஆனால் இழப்பீடு பணம் வழங்கப்படவில்லை. கோர்ட் உத்தரவுப் படி கோர்ட் ஊழியர்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.  அப்போது மாவட்ட ஆட்சியர் எனும் பெயர் மறைக்கப்பட்ட நிலையில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது.அந்த காரில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படுவதாக உறுதி அளித்த பின் ஜப்தி நோட்டீஸ் அகற்றப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!